தன்னால் முடிந்த அளவுக்கு உடை குறைப்பு புரட்சியை தமிழிலும் தெலுங்கிலும் செய்து வரும் ப்ரியாமணிக்கு முன்னணி இடம் மட்டும் கிடைத்தபாடில்லை. ஆனால் இவரைப் பற்றிய கிசுகிசு செய்திகளுக்குப் பஞ்சம் இல்லை. இவருக்கும் ப்ரித்விராஜ்க்கும் ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் நடிக்கும் போது காதல் தீ பற்றி விட்டதாக வதந்தியை சிலர் கிளப்பி விட்டார்கள்.
அந்த தீ அணையும் முன்னே... இப்போது, அடுத்த வதந்தி. இது நடிகர் தருணுக்கும் ப்ரியாமணிக்கும் திருமணம் நடந்து விட்டது என்பதுதான். இந்த செய்தியைக் கேட்டு , ‘தருணுடன் நடித்தே சில வருடங்கள் ஆகி விட்டன. இப்போது ஏன் இப்படி வதந்தியை கிளப்புகிறார்கள் என்று தெரியவில்லை...’ என்று அலறுகிறார்.
No comments:
Post a Comment