600 விளம்பரப் படங்களுக்கு மேல் இயக்கி விட்ட இவர் இந்தப் படம் பற்றி ‘ஜெமினி கணேசனை காதல் மன்னன் என்கிற ஒரு சிறு வட்டத்திற்குள் வைத்துப் பழகிவிட்டார்கள். அவருக்குள் இருந்த பல்வேறு முகங்கள் உலகம் அறியாதவை. திரை உலகத்தில் அவருக்கு எதிரிகளே இல்லை. சிவாஜி, எம்.ஜி.ஆர். என இரு மலைகள் இடையே நுழைந்து தமக்கென ஒரு நிலையான இடத்தை உருவாக்கியவர். கலப்புத் திருமணம் செய்து கொண்டவர். இப்படி அவரைப் பற்றிய விஷயங்கள் ஏராளம். அவற்றை வைத்துத்தான் இந்த வரலாற்றுப் படத்தை உருவாக்கி உள்ளேன் என்கிறார் இவர்.
இரண்டு மணி நேரம் ஓடும் இப்படம் முதல் பாதி ஜெமினியின் சிறு வயது வாழ்க்கையைச் சொல்கிறது. இப்பகுதி நடிகர்களை நடிக்க வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் முழு நீள விறுவிறுப்பான திரை வடிவமாக உருவாகி உள்ளது. பல மாதங்கள் சிரமப்பட்டு ஆதாரங்களைத் திரட்டி படத்தை இயக்கி உள்ளார் வெங்கடேசன்.
திரையில் 70 வருடங்கள் கோலாச்சிய ஒரு நடிகரின் வாழ்க்கைப் பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய திரைப்படமாக உருவாகியிருப்பது ரசிகர்களுக்குப் புது அனுபவமாக
No comments:
Post a Comment