Wednesday, September 9, 2009

'கண்டேன் காதலை' வாங்கிய சன் பிக்சர்ஸ்!

Bharath with Tamanna
பரத் - தமன்னா நடிப்பில் மோசர் பேர் தயாரித்த கண்டேன் காதலை படத்தின் வெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

இத்தகவலை மோசர் பேர் நிறுவன திரைப்படப் பிரிவின் தலைமை செயல் அலுவலர் ஜி தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை சில தினங்களுக்கு முன் சன் பிக்ஸர்ஸ் குழுவினர் பார்த்ததாகவும், படம் அவர்களுக்கு வெகுவாகப் பிடித்துவிட்டதால் தாங்களே வாங்கிக் கொள்வதாகவும் கூறிவிட்டார்களாம்.

படத்தை தங்கள் வசதிக் கேற்ப சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்றும், இனி தங்களின் அடுத்த படமான 'அவள் பெயர் தமிழரசி'யில் கவனம் செலுத்தப்போவதாகவும் தனஞ்செயன் தனது பத்திரிகைக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கண்டேன் காதலை, ஜெயம் கொண்டான் படம் மூலம் அறிமுகமான ஆர் கண்ணன் இயக்கியுள்ளார். பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை [^]

ஜப் வி மெட் எனும் இந்திப் படத்தின் தழுவல்தான் இந்த 'கண்டேன் காதலை' படம் [^].
வித்யாசாகர்.

No comments: