Wednesday, September 9, 2009

நான் படிக்கப் போறேன் - ஷாமிலி

ஷாலினியின் தங்கை ஷாமிலி தெலுங்கில் சித்தார்த்துடன் இணைந்து அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழில் அவரை நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் படையெடுத்தனர்.
ஆனால் இப்போதைக்கு நடிப்பதில்லை என்பதை திட்டவட்டமாக கூறிவிட்டார் ஷாமிலி. ‘சிறு குழந்தை நட்சத்திரமாக நான் நடித்த போது எனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்கள் இன்று நான் கதாநாயகியாக நடிக்கும் போதும் ஆதரவு கொடுத்துள்ளது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
ஆனால், நான் தொடர்ந்து தற்போது சினிமாவில் நடிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். இப்போதைக்கு எனக்கு என் படிப்பு தான் முக்கியம். சிங்கப்பூரில் என் மேற்படிப்பைத் தொடரப் போகிறேன். படித்துவிட்டு வந்த பிறகு மீண்டும் நடிப்பேன்...’ என்கிறார் ஷாமிலி.
நல்ல தெளிவாகத்தான் இருக்காங்க...

No comments: